ஒன்றியத் தலைவர் டொக்டர் எம்.கேஇரகுநாதன் தலைமையில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
![]() |
| டொக்டர் எம்.கேஇரகுநாதன் தலைமையில்... |
சென்ற கூட்ட அறிக்கை செயலாளர் திரு.க.சண்முகசுந்தரம் அவர்களால் வாசிக்கபட்டது.
சிலை திறப்பு, பழைய அதிபர்.திரு.மு.கனகலிங்கம் இடமாற்றம், புதிய அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் பதவியேற்பு உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
வேறு பல விடயங்களும் கலந்துரையாடப்படன.
புதிய அதிபருடன் கலந்துரையாடிய தகவல்களை முருகானந்தன் கூட்டத்தினருக்கு விளக்கினார்.
உடனடியாக பாடசாலைக்கு தேவையான விடயங்களாக இனங்காணப்பட்டவை பின் வருமாறு
- போட்டோ கொப்பி இயந்திரம் அவசியமாகத் தேவைப்படுகிறது. முக்கியமாக பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த பயிற்சி வினாத்தாள்களை பிரதி பண்ண இது தேவை எனஅதிபர் வேண்டியிருந்தார்.
- போட்டோ பிரதி இயந்திரம், கணனி ஆகியன வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை மேம்படுத்த அதற்கு இரும்பிலான கதவு தேவை என உணரப்பட்டது.
- பாடசாலையில் பாலர் வளாகத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை அதிபர் வலியுறுத்தியமையும் கவனத்திற்கு எடுக்கப்பட்டது.
- பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என ஒரு மருத்துவ முகாம் நாடாத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
- இவற்றிற்கான நிதி வளங்களைப் பெறும் வழிகள் பற்றியும் ஆராயப்பட்டது.
- இடமாற்றம் சென்று அதிபர்.மு.கனகலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடைக் கூட்டம், புதிய அதிபருக்கு வரவேற்புக் கூட்டம் ஆகியவற்றை இணைத்துச் செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.
![]() |
| கொழும்பு இந்துக் கல்லூரியில் சரஸ்வதி சிலை |
.....
![]() |
| கொழும்பு இந்துக் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை |
......
![]() |
| கொழும்பு இந்துக் கல்லூரியில் கம்பர் சிலை |
எமது பாடசாலையில் சரஸ்வதி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே. அவற்றிற்கான பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இது எமது பாடசாலையின் பிரதான வளாகத்தின் சரஸ்வதி சிலை.
இதற்கு தகரத்திலான கூடம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம்.
0.0.0.0.0.0.0






0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது