Tuesday, October 4, 2011

அதிபர் கனகலிங்கத்திற்கு பிரிவுபசார விழா

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயம் சென்ற சில வருடங்களில்  கற்கைப் பெறுபேறுகளிலும், தளவசதிகளிலும் துரித முன்னேற்றம் அடைந்ததற்குக் காரணம் அதிபர் திரு.மு.கனகலிங்கம் ஆவார். 5 வருடங்களாகக் கடமையாற்றிய பின்னர் சென்ற 20.06.2011 முதல் மணல்காடு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்ட செய்தியை நீங்கள் அறிவீர்கள்.

இடமாற்றம் பெற்றுச் சென்ற அவருக்கு சென்ற மாதம் செப்படம்பர் 23ம் திகதி வெள்ளிக் கிழமை அதிபர் திரு. பொன்னையா பொன்னம்பலம் தலைமையில் பிரிவுபசாரக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலையின் பாலர் வளாக முன்றலில் மாணவர்களும் பான்ட் குழுவினரும் அதிபரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.

மாலைகளும், மலர்களும் கை நிறைத்து, அகம் மலர்ந்து மனங்கிளற, தம் அன்பை வெளிப்படுத்த பாலர் வளாகச் சிறார்கள் காத்திருக்கிறார்கள். அதிபருக்கு விபூதி, சந்தன.

சரஸ்வதி சிலையருகே குங்குமத் தட்டை நீட்டும் ஆசிரியை .

இன்றைய அதிபர் அகம் மகிழ்ந்திருக்க நேற்றைய அதிபருக்கு மலர் மாலை உபசாரம். அருகிருக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அதிபர் திரு.மு.கனகலிங்கம், ஆசிரியையான தனது மனைவி திருமதி.குகநந்தினி கனகலிங்கம் அவர்களுடன்.


அடடா! அருகில் நின்றதால் எனது கழுத்திலும் ஒரு மலர் மாலை விழுந்தது. அருகே நிற்பது அதிபர் திரு.பொ.பொன்னம்பலம். அவருக்குப் பின்னே பாடசாலை அபிவிருத்திச் சங்க செய்லாளர். திரு.ஆ.சிறீதரன்.


காலை ஒன்பது மணியளவில் பாடசாலையில் பாலர் வளாகத்திலிருந்து அதிபரும் அவரது பாரியாரும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய இசை முழங்க அணிவகுப்பாக அழைத்துச் சென்றனர்.

 எமது பாடசாலையின் இளைப்பாறிய ஆசிரியையான திருமதி.வேலுப்பிள்ளை அவர்கள் தனது இல்ல முன்றலில் அதிபரை வரவேற்கிறார். விபூதி,பொட்டு அணிவித்து மலர்மாலை சூடி அதிபரைக் கெளரவித்தார்.


எமது ஊரில் பள்ளி முன்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் அதிபருக்கு மாலை அணிவித்துக் கெளரவிக்கக் காத்திருக்கிறார்கள்.


முன்னை நாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம் பார்த்திருக்க இந்நாள் அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் அவர்களுக்கு மலர் மாலை அணிவிப்பு.


பாலர் வளாகம் முதல் பிரதான வளாகம் வரையான வீதியின் அருகில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு வாசலில்  குத்துவிளக்கேற்றி வரவேற்று மாலைகள் அணிவித்துக் கெளரவித்தனர்.


அதிபரும் பாரியாரும்.பாடசாலை முன்றலில் பொட்டிற்று மலர் மாலை சாத்தி ஆசரியர்களாலும் மாணவர்களாலும் வரவேற்கப்பட்டனர்.


பாடசாலையின் பெரிய  வாயில் அருகே வரவேற்பு.

அதிபர் தம்பதிகள் அருகில் இருப்பது தற்போதைய அதிபர் திரு. பொன்னையா பொன்னம்பலம் அவர்களாகும். கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில் பிரிவுபசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற M.K.முருகானந்தனும் அருகில் நிற்கிறார்.


மேடையில் அதிபர் உட்பட பிரமுகர்கள் தங்கள் ஆசனங்களுக்கு வருகின்றனர்.


பாடசாலையின் பிரதான மண்டபத்தில் விழா நடைபெற்றது. மண்டபம் நிறைய மாணவர்களும், பழைய மாணவர்கள், அபிமானிகள் கலந்து கொண்டனர்.

 வரவேற்புரையை பாடசாலை ஆசிரியை திருமதி.அன்னராணி சண்முகநாதன் நிகழ்த்துகிறார்.


அதிபர் திரு. பொன்னையா பொன்னம்பலம் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அடுத்து எனது உரை (எம்.கே.முருகானந்தன்) இடம் பெற்றது.


 பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பின் சார்பாக அதிபர்.திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கு ஒரு அழகிய குத்து விளக்கு அன்பளிக்கப்பட்டது.


பாடசாலை பழைய மாணவரும் முன்னாள் தொழில்நுட்பக் கல்லூரி அதிபருமான திரு.க.கதிரமலை அவர்கள் உரையாற்றுகிறார்.


பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவரான திரு.க.ஈஸ்வரபாதம் வாழ்துரைக்கிறார்.

விழா மேசையில் அதிபர் அவர்களுக்கு பாடசாலையால் அளிக்கபட்ட வாழ்த்துப்பாவும், கொழும்பு பழைய மாணவர் ஒன்றித்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குத்துவிளக்கும் காணப்படுகின்றன. மேசையை நிரப்புகிறது அவருக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலைகள்.


பழைய மாணவரும், பிரதேச சபை உறுப்பினருமான திரு.செல்வராசா உரையாற்றுகிறார்.


பாடசாலை மாணவி அதிபரைப் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்.



பழைய மாணவரும், கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு.சு.சற்குணராசா உரையாற்றுகிறார்.


அதிபருடனான அனுபவங்களை பாடசாலை ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.


வாழ்த்துரை வழங்கியவர். திருமதி.எஸ்.சிறிகாந்தா அவர்களாகும்.


பாராட்டுரைகளை பல அன்பர்களும் வழங்கினார்கள்.


முன்னாள் ஆசிரியை திருமதி பரமானந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்


கலைமணியின் சார்பாக  அதன் தலைவர் திரு.குணா அவர்களால் வாழ்த்துப்பா அளித்துக் கெளரவிக்கப்படுகிறார்.


திரு.இராமச்சந்திரன் பெற்றோர்கள் சார்பாக உரையாற்றுகிறார்.


உபஅதிபர்.திரு.கணநாதன் பாடசாலை சார்பாக உரையாற்றுகிறார்.

 உபஅதிபர்.திரு.கணநாதன் முன்னாள் அதிபருக்கு வாழ்த்துப்பாவை அன்பளிக்கிறார்.

 திரு.குருசாமி அவர்கள் இன்பருட்டி சமூகம் சார்பாக அதிபரைக் கெளரவிக்கிறார்.

 இடமாற்றம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர். திரு.மு.கனகலிங்கம் நன்றியுரை நவில்கிறார்.


 பாடசாலை ஆசிரியர் திருமதி.T.கீதாஞ்சலி நன்றியுரை நிகழ்த்துகிறார்.


பாடசாலைக் கீதம் இசைக்கப்படுகிறது. அனைவரும் எழுந்து நின்று கீதமிசைப்பில் கலந்து கொள்கின்றனர்.



எமது பாடசாலையின் அண்மைக்கால சரித்திரத்தில் இல்லாதளவு மிகச் சிறப்பாக இந்தப் பிரிவுசார விழா நடைபெற்றது.

இவ் விழா சிறப்பாக நடைபெற முயற்சி எடுத்துப் பாடுபட்டு உழைத்த அதிபர் திரு.பொன்னம்பலம், உதவி அதிபர் திரு.கணநாதன், ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்.

அதிபருக்கும் பாரியாருக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கும் மதியபோசன விருந்துபசாரம் அளித்து பாடசாலைச் வமூகம் தனது நன்றியை வெளிப்படுத்தியது.

0.0.0.0.0.0.0

Post Comment

1 comments:

  1. மேலைப்புலோலியின் வளர்ச்சியில் அதிபர் மு . கனகலிங்கம் அவர்களின் சேவை அளப்பரியது ......மேலைப்புலோலியின் எழிச்சிப்பாதையில் அவர் ஒரு விடிவெள்ளி ..... அதிபர் அவர்களுடைய சேவை நலன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கலைமணியின் சார்பில் அதிபரை பாராட்ட எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .. அதிபர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .... நீடுழி வாழ வாழ்த்துக்கள் .........

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது