சிறந்த அதிபர் விருது இவ்வருடம் எமது பாடசாலையில் பணியாற்றிய, திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கு முன்னோடி அதிபராகக் கடமையாற்றியதற்காகக் கிடைத்துள்ளது.
ஆசிரியர் தினமாகிய இன்று அதற்கான விருந்து கொழும்பில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட இருக்கிறது.
அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தூரநோக்கு, நற்பண்புகள், நட்புணர்வு, அனைவரையும் அணைத்துச் செல்லும் பண்பு போன்றவற்றின் துணைகொண்டு எமது பாடசாலையை வடமராட்சிப் பகுதியின் முன்னணி ஆரம்பப் பாடசாலை என்ற நிலைக்கு உயர்தியமைக்காகவே அவருக்கு இவ்விருது கிட்டியுள்ளது.
ஏற்கனவே M.A Ed பட்டம் பெற்ற அவருக்கு இன்று மற்றொரு பட்டமளிப்பு விழாவும் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற இருக்கிறது. இன்று அவர் M.Phil (Ed) பட்டம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் இரு விருதுகளைப் பெறும் அவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாகவும், எமது பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியம் கொழும்பு சார்பாகவும், தனிப்பட்ட ரீதியில் நண்பன் என்ற முறையிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்திலும் அவர் மேலும் சிறப்புகளையும் விருதுகளையும் பதவி உயர்வுகளையும் எட்டி வாழ வாழ்த்துகிறோம்.
அவரது பணிகளின் போது அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் அவரது துணைவியார் திருமதி குகநந்தினி கனகலிங்கம் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
எமது பாடசாலை அதிபர் திரு. பொன்னையா பொன்னம்பலம், உபஅதிபர் திரு.கணநாதன் ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும் எல்லோர் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.
வடமராட்சிக் கல்விப் பாரம்பரியத்தைப் பேணி, மேலும் வளர்ந்து வரும் அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
வடமராட்சிப் பகுதியில் உள்ள ஏனைய இரு பாடசாலை அதிபர்களும் இவ்விருதைப் பெறுகிறார்கள். நெல்லியடி மத்திய வித்தியாலய அதிபர் திரு.சேதுராஜா அவர்களும் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் சிவசுந்தரம் ஆகியோரே அவ் இருவரும். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
ஆசிரியர் தினமாகிய இன்று எனக்கு சிறு வயதில் கற்பித்தவர்கள் பாக்கியக்கா, பொன்னம்மா அக்கா, நல்லம்மா அக்கா, சுப்பிரமணிய வாத்தியார், வேலுப்பிள்ளை வாத்தியார், முருகுப்பிள்ளை வாத்தியார், கிருஸ்ணதாஸ் மாஸ்டர், ஆறுமுகம் மாஸ்டர், ராசதுரை மாஸ்டர் எனப் பலர்.
அதன் பின்னர் ஹாட்லிக் கல்லூர், மருத்துவ பீடம் எனப் பல நிலைகளிலும் எம்மை வளர்த்து ஆளாக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது பணிவான வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

0.0.0.0.0.0.0.0

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது