Tuesday, October 11, 2011

பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கு மின்சார வசதி தேவை

எமது பாடசாலைக்கு இடப் பற்றாக்குறை இருப்பதை அறிவோம். இதனைப் பற்றி சென்ற வருடம் நான் பாடசாலைக்குச் சென்று நேரடியாக பார்த்த அனுபவதில் குறிப்பிட்டுள்ளேன்.

பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் படித்த எனது பாடசாலை

மாணவர்கள் விளையாட்டு அரங்கிலும், களஞ்சிய அறையிலும் மாணவர்களுக்கான  வகுப்புகள் நடைபெற்றதை அவதானித்து மனம் வருந்தினேன்.

களஞ்சிய அறை வகுப்பறையானது

விளையாட்டு அரங்கும் வகுப்பறையானது


இப்பொழுது பாடசாலைக்கான புதிய மூன்று வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

மாகாண சபையைச் சார்ந்து கணக்காளர் திரு.சிவபாதம் அவர்களது கடுமையான முயற்சியினால் இக்கட்டடம் அரசநிதி கொண்டு அமைப்பது சாத்தியப்பட்டுள்ளது.


சென்ற மாதம் செப்படம்பர் 23ம் திகதி அதிபர் திரு.மு.கனகலிங்கம் பிரிவுபசாரக் கூட்டம்நடைபெற்றபோது கட்டட நிர்மாணவேலைகள் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.


இம்மாத இறுதிக்குள் இது நிறைவுற்று திறப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆயினும் வகுப்பறைக்கான மின்சார இணைப்பு இத்திட்டத்தில் அடங்கவில்லை. இதனால் வகுப்பறை அமைக்கப்பட்டாலும் மாணவர்கள் மின்விளக்கு மற்றும் மின்விசிறி போன்ற வசதிகள் இன்றி சிரமப்பட நேரும்.

மின்சார இணைப்பு அளிப்பதற்கு சுமார் 125,000/= - 150,000/=  வரை செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவியை பழைய மாணவர்களும், பாடசாலை அபிமானிகளும் வழங்க முன்வருவார்களேயானால் மாணவர்கள் சுமுகமான சூழலில் படிக்க உதவும்.

0.0.0.0.0.0.0.0

Post Comment

4 comments:

  1. அருமையான பதிவு!

    ReplyDelete
  2. எப்படி அனுப்புவது என்று சொல்லவில்லையே!

    ReplyDelete
  3. இக்கறைக்கு நன்றி வடுவூர் குமார்.
    இந்த வேண்டுகோள் பாடசாலையில் படித்தவர்கள், பாடசாலைச் சூழலில் வசிப்பவர்கள், வசித்தவர்கள் அதோடு தொடர்புள்ளவர்களை நோக்கியே விடுக்கப்பட்டது.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது