Saturday, November 12, 2011

ஆசிரியர் பிரதீப பிரபா 2011 விருது அதிபர் கனகலிங்கம் அவர்களுக்கு

எமது யா மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றதற்காக திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கு மேற் சொன்ன ஆசிரியர் பிரதீபா பிரபா 2011 விருது வழங்கப்பட்டுள்ளது.

பாராட்டுச் சான்றிதழ்

மகிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு வேலைத் திட்டத்திற்கேற்ப
எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளக கூடிய 
தேர்ச்சிகள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளை
இலங்கையின் நற்பிரஜைகளாக
சமூகத்திற்குப் பெற்றுத் தரும் 
சிரேஷ்ட பணிக்கு தலைமைத்துவத்தை வழங்கி
பாடசாலையை வெற்றியின்பால் இட்டுச் சென்ற
வடமராட்சி வலைய 
யா மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் 
அதிபராகிய
திரு.மு.கனகலிங்கம் 
ஆற்றிய மிகவுயர் சேவைக்காக
இம் மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுறது

என எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர், பிரதி அமைச்சர், கல்விச் செயலாளர், மற்றும் பிரதிச் செயலாளர் கையொப்பம் இட்ட சான்றிதழ் இதுவாகும்

எமது பாடசாலையை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்ற அதிபர்.திரு.மு.கனலிங்கம் அவர்களுக்கு எமது நன்றி கலந்த பாராட்டுகள் உரித்தாகுக.

பாராட்டுச் சான்றிதழ் சின்னம் ஆகியவற்றுடன் அதிபர்.திரு.மு.கனலிங்கம்

அவர் இட்ட அத்திபாரத்தில் எமது பாடசாலை தொடர்ந்து முன்னேறுவதற்கு புதிய அதிபர்.திரு.பொ.பொன்னம்பலம், உபஅதிபர்.திரு.கணநாதன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அளித்த வண்ணம் உள்ளனர்.

பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல அனைவரது ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.

0.0.0.0.0.0.0


Post Comment

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது