சென்ற 20.11.2011 அன்று நடைபெற்ற பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா காலை 9 மணியளவில் மிகக் கோலாலகலமாக ஆரம்பமானது.
மப்பும் மந்தாரமுமான மாரிகாலம் ஆன போதும் விழா குறித்த நேரத்தில் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.சு.சற்குணராசா அவர்களையும் அவரது துணைவியார் திருமதி செல்வரஞ்சிதம் சற்குணராசா அவர்களும் பாடசாலை பிரதான வாயிலில் வரவேற்கப்பட்டனர்.
அதிபர் திரு.பொ.பொன்னம்பலம், முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கூடி நின்று பிரதம விருந்தினரை வரவேற்றனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரான திரு ஆ.சிறிதரன் எமது பாரம்பரிய முறைப்படி விபூதி, சந்தனம், குங்குமம் அளித்து விருந்தினர்களை வரவேற்றார்.
பாடசாலைக் கீதம் இசைக்கப்படும்போது பிரமுகர்கள் மேடையில் எழுந்து நிற்பதைப் படத்தில் காணலாம்.
பிரதம விருந்தினர் திரு.சு.சற்குணராசா குத்துவிளக்கு ஏற்றுகிறார்.
முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம்அவர்களும் ஏனைய பல பிரமுகர்களும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மங்களகரமாக விழாவை ஆரம்பித்தனர்.
பிரதம விருந்தினர் திரு.சு.சற்குணராசா உரையாற்றுகிறார்.
அதிபர் உரையுடன், முன்னை நாள் அதிபர் திரு மு.கனகலிங்கம், திரு.க.ஈஸ்வரபாதம், திரு.செல்வராசா ஆகியோரும் சுருக்கமாக உரையாற்றினர்.
பாடசாலைப் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருமாற்போல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நாடகம், தாள நடனம், ஆங்கில தமிழ் உரைகள், அபிநய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தன.
பெற்றோர்கள், பாடசாலை அபிமானிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
விசேட அம்சமாக புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ மாணவிகளின் புகைப்படங்கள் திரையில் காட்டப்பட்டன.

0.0.0.0.0.0.0.0

எத்தனையோ அதிசிறந்த கல்விமான்களிற்கு அ ஆ .... அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த இந்தக் கல்விக்கூடம் தொடர்-ந்தும் தன்பாணியில் சிறப்புடன் தொண்டாற்ற வாழ்த்துக்கள். பாடசாலையின் உயர்வில் என்றும் மிக்க உறுதுணையாக இருக்கும் பழையமாணவர் சங்க உறுப்பினர்களுக்கு விசேட வாழ்த்துக்கள்.
ReplyDelete