Thursday, November 10, 2011

டென்மார்க் நண்பர்கள் உதவியுடன் போட்டோ பிரதி மெசின்

"எமது பாடசாலைக்கு போட்டோ பிரதி யந்திரம் ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது" என்பது திரு.பொ.பொன்னம்பலம் எமது பாடசாலைக்கு அதிபராக வந்தவுடன் விடுத்த முதற் கோரிக்கையாகும்.



5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலை தொடர்ந்தும் முன்னணியில் நிற்பதை உறுதி செய்வதற்கும், ஏனைய நாளாந்தத் தேவைகளுக்கும் இது அவசியமாகும்.

மாணவர்கள் தொடர்ந்தும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில்சிறப்பாகச் சித்தி எய்துவதற்கு அவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களை கொடுத்து, பயிற்சியளித்து உதவ வேண்டும் என்பதற்காகவே இது மிக முக்கியமாகத் தேவைப்பட்டது.

எமது பழைய மாணவர் ஒன்றியம் இதற்கெனக் கைகொடுக்கத் தீர்மானித்தபோது டென்மார்க்கில் வதியும் திரு.இரத்தினசபாபதி கிருஷ்ணராசா உதவ முன் வந்தார். அவர் ஏற்கனவே அளித்திருந்த ரூபா 98,650/= வுடன், வேறு பணிகளுக்காக எமது ஒன்றியத்தின் நிதியிலிருந்த ரூபா 40,000/= வைக் கொண்டு ஒரு புதிய போட்டோ பிரதி யந்திரத்தை அன்பளித்திருக்கிறோம்.



அதிபர் திரு.மு.கனகலிங்கம் அவர்களது பிரிவுபசாரக் கூட்டம் நடைபெற்றபோது அதிபர்.பொ.பொன்னம்பலம் அவர்களிடம் அது கையளிக்கப்பட்டது.

நிதி அன்பளிப்புச் செய்த திரு.இரத்தினசபாபதி கிருஷ்ணராசாஅவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் எமது ஒன்றியத்தின் சார்பிலும் பாடசாலை சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.கு

போட்டோ பிரதி யந்திரம் தமது நாளாந்த கற்கைச் செயற்பாடுகள், பரீட்சை வினாத்தாள்கள் தயாரித்தல், மாதிரிப் பரீட்சைகள் போன்ற பலவற்றிகும் உதவுவதாக அதிபர் அறிவித்துள்ளார்.

0.0.0.0.0.0.0

Post Comment

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது