மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய கொழும்பு பழைய மாணவர் ஒன்றியத்தினரின்
2012 ம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் வரும் பெப்ருவரி மாசம் 12 ம் திகதி நடைபெறுவதற்கு உத்தேசிக்கபட்டுள்ளது.
14.01.1997 ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக இது தைப்பொங்கல் தினத்தன்றே பம்பலப்பிட்டி இந்துக் கல்லாரியில் நடைபெற்று வந்துள்ளது.
தைப்பொங்கல் தினத்தன்று நடாத்துவதால் பலருக்கு சிரமமானது.
இருந்தபோதும் தைமாதத்தின் முதலாவது பெளர்ணமி தினம் தைப்பொங்கலுக்கு முன்னரே இவ்வருடம் வந்ததால் தமிழ் மரபுக்கு இணங்க அத் தினம் புதுவருடத்தில் அல்ல என்ற கருத்து நிலவியது. இதன் காரணமாக அத்தினம் உசிதமானது அல்ல எனப் பலரும் டிசம்பர் 25ம் திகதி நடந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் கருத்துகள் வெளியிட்டனர்.
எனவே வேறு ஒரு தினத்தில் நடாத்த எண்ணிய போது பல நிர்வாகக் காரணங்களுக்காக இதனை மேற் கூறிய 12.02.2012 ல் நடாத்த முடிவுசெய்யப்பட்டது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்தோசிக்க வேண்டிய விடயங்கள், எடுக்க வேண்டிய தீர்மானங்கள், மற்றும் பாடசாலை வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வரவேற்கப்படுகிறது.
மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிகழும் இடம் இன்னமும் உறுதியாகவில்லை. பெரும்பாலும் வழமைபோல பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியாக இருக்கும்.
இருந்தபோதும் நேரம் இடம் ஆகியன உறுதியான பின்னர் அறிவிக்கப்படும்.
உங்கள் கருத்துக்களை ஈமெயில் மூலம் எமது ஒன்றியத்திற்கு தெரிவிக்கவும். அங்கத்தவர்கள் அத்தின மாலை நேரத்தை எமது ஒன்றிய வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்காக ஒதுக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

- முக்கியமாக பெண்களுக்கு கலந்து கொள்வது பண்டிகைத் தினத்தில் சிரமாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
- அத்துடன் கண்டி போன்ற தூர இடங்களிலிருந்து வருவதற்கும் இது வசதிக் குறைவாக இருந்தது.
இருந்தபோதும் தைமாதத்தின் முதலாவது பெளர்ணமி தினம் தைப்பொங்கலுக்கு முன்னரே இவ்வருடம் வந்ததால் தமிழ் மரபுக்கு இணங்க அத் தினம் புதுவருடத்தில் அல்ல என்ற கருத்து நிலவியது. இதன் காரணமாக அத்தினம் உசிதமானது அல்ல எனப் பலரும் டிசம்பர் 25ம் திகதி நடந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் கருத்துகள் வெளியிட்டனர்.
எனவே வேறு ஒரு தினத்தில் நடாத்த எண்ணிய போது பல நிர்வாகக் காரணங்களுக்காக இதனை மேற் கூறிய 12.02.2012 ல் நடாத்த முடிவுசெய்யப்பட்டது.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்தோசிக்க வேண்டிய விடயங்கள், எடுக்க வேண்டிய தீர்மானங்கள், மற்றும் பாடசாலை வளர்ச்சிக்காக எடுக்க வேண்டிய செயற்பாடுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வரவேற்கப்படுகிறது.
மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிகழும் இடம் இன்னமும் உறுதியாகவில்லை. பெரும்பாலும் வழமைபோல பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியாக இருக்கும்.
இருந்தபோதும் நேரம் இடம் ஆகியன உறுதியான பின்னர் அறிவிக்கப்படும்.
உங்கள் கருத்துக்களை ஈமெயில் மூலம் எமது ஒன்றியத்திற்கு தெரிவிக்கவும். அங்கத்தவர்கள் அத்தின மாலை நேரத்தை எமது ஒன்றிய வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்காக ஒதுக்கி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
0.0.0
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது