Thursday, December 8, 2011

பரிசளிப்பு விழாவில் பரிசளிக்க உதவிய புரவலர்கள்

புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு பரிசில்கள் வழங்கவும் பரிசளிப்பு விழாவில் ஏனைய பரிசுகள் அளிக்கவும் உதவிய புரவலர்கள்.

2011ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு பரிசில்கள் வழங்க நிதி உதவி வழங்கியோர்.

எமது பாடசாலையான மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்திலிருந்து மேற்படி புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்தோருக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் வருடாவருடம் இளஞானச் சுடர் விருதினையும், பணப் பரிசிலையும் வழங்கி வருவதை அறிவீர்கள்.


இவ் வருடம் 13 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளனர் என்பதை ஏற்கனவே அறியத் தந்தோம்.

அவர்களுக்கு சென்ற 20ம் திகதி (20.11.2011) ஞாயிறு தினத்தில் நடைபெற்ற  வருடாந்த பரிசளிப்பு விழாவின் போது பரிசில்கள் வழங்கப்பட்டன. அதற்கான நிதியுதவி வழங்கியோர் விபரம் பின் வருமாறு
  1. திரு.முருகுப்பிள்ளை சோமசுந்தரம் - ரூபா 5000.00
  2. திருமதி.கெங்கா இராமச்சந்திரன்-  ரூபா 5000.00
  3. திரு.S.இரத்தினசிங்கம்- ரூபா 2000.00
  4. திரு.கந்தயினார் முருகவேள் (அவுஸ்திரேலியா)- ரூபா 2000.00
  5. திரு.சிதம்பரம் வர்ணகுலசிங்கம்; - ரூபா 2000.00
  6. திரு.கதிர்காமத்தம்பி கலாகரன் - ரூபா 2000.00
  7. திரு.கதிர்காமத்தம்பி பிரபாகரன் - ரூபா 2000.00
  8. திரு.கந்தயினார் பாலதாஸ் (கண்டி) - ரூபா 2000.00
  9. திரு.சிதம்பரப்பிள்ளை வாசுதேவன்  (கண்டி) - ரூபா 2000.00
இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்படி பரிசுப் பணத்தை வருடாந்தம் வழங்குவதற்கு இணங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ற வருடமும் தந்து உதவினார்கள்.

விசேட பரிசுகள்

இவற்றைத் தவிர கீழ்கண்டவர்களால் மேலும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

  1. டொக்டர்.M.K.இரகுநாதன் அவர்களால், அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு திரு திருமதி கனகசபாபதி வருடாந்த நினைவுப் பரிசிற்காக வைப்பிலிட்ட ரூபா 100,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
  2. டொக்டர்.S.N.செல்வச்சந்திரன் அவர்களால், புள்ளிகள் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வருவோருக்கு அவர் வைப்பிலிட்ட ரூபா 200,000.00 லிருந்து கிடைக்கும் வருடாந்த வட்டிப் பணம்  50%, 30%, 20% என்ற விகிதத்தில் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
  3. திரு.கேதீஸ்வரன் அவர்களால் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் வருபவருக்கு அமரர் முன்னாள் அதிபர் ந.சிவபாதசுந்தரம் நினைவாக வைப்பிலிடப்பட்ட 15,000.00 (பதினையாயிரம்) ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம் பரிசாக வழங்கப்படும். 
  4. இவற்றைத் தவிர திரு.கதி்காமத்தம்பி சுதாகரன்  புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி உற்சாகம் ஊட்டினார்
  5. கண்டி S.K.கொம்பனி சார்பாக அமரர்.V.K.கந்தையா ஞாபகமாக அவரது புத்திரர்களான திரு.கந்தையா இராமச்சந்திரன் திரு.கந்தையா சிறீஸ்கந்தராசா ஆகியோர் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்காக ரூபா 5000.00 வருடாவருடம் வழங்கி வருகின்றனர்.
  6. திரு.நா.தங்கராசா தனது ஜெயகணேசா வர்த்தக நிலையம் சார்பாக புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பெறுமதி மிக்க அகராதியை  பரிசாக வழங்கினார்.
வருடாந்த பரிசளிப்பு விழாவன்று  திரு.கதி்காமத்தம்பி சுதாகரன் பாடசாலைக்கென ஒரு மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை வளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு பரிசளிக்வும் உதவி வழங்கிய புரவலர்கள் அனைவருக்கும் எமது ஒன்றியத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறென்.
0.0.0.0.0.0.0

Post Comment

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது