Tuesday, January 10, 2012

எமது பாடசாலையில் மருத்துவப் பரிசோதனை முகாம்


சென்ற மாதம் எமது பாடசாலையில் ஒரு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. எமது ஒன்றியத்தின் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதனின் தளாராத முயற்சியினால் இது திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

450ற்கு மேட்பட்டவர்கள் இதனால் பயனடைந்தனர்.


கொழும்பு தேசிய வைத்தியசாலை பொது மருத்துவ நிபுணரான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் தலைமையில் இது நடைபெற்றது. அவருடன் குழந்தை மருத்துவத்துறை சார்ந்த சிரேஷ்ட மருத்துவர்களான டொக்டர்கள் இரவீந்திரன், ஜக்கோப்ஸன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் வியாபாரிமூலை கிராமத்தைச் சார்ந்த டொக்டர் வசந்தன் தவநாதனும் கலந்து கொண்டார்.

பாடசாலை முன்றலில் வங்கி முகாமையாளர் சிவநேசன், மருத்துவர்களான மகாலிங்கம் இரகுநாதன் ஆகியோர்

பிள்ளைகளிடையே பற்சொத்தை, ஒழுங்கற்ற பற்கள், முரசு நோய்கள் போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படுவதால் பல்வைத்திய நிபுணரான டொக்டர் க.மகாலிங்கம் அவர்களும் கலந்து கொண்டார். இவரும் வியாபாரிமூலை கிராமத்தைச் சார்ந்தவராவார்.

குத்துவிளக்கு ஏற்றி, பிரார்த்னை செய்து எமது பாரம்பரிய முறைப்படி நிகழ்வு ஆரம்பமாகியது.

ஒன்றியத்தின் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் குத்துவிளக்கு ஏற்றுகிறார்

காலை 8.30மணியளவில் ஆரம்பமான நிகழ்வு மதிய உணவிற்குப் பின்னரும் தொடர்ந்தது.

மாணவர்களுடன் வழிபாட்டில் அதிபர் திரு.பொன்னம்பலம்

ஆரம்ப வைபவமாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அதிபர் திரு.பொன்னம்பலம், டொக்டர் இரகுநாதன் மற்றும் சிலரும் சுருக்கமான உரைகளை ஆற்றினர்.

ஆரம்ப விழா மேடையில் பிரமுகர்கள்.

பாடசாலை மாணவ மாணவிகள் அனைவருக்கும் பொதுவான மருத்துவப் பரிசோதனை, மற்றும் பற்பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆசிரியர்களும் பரிசோதிக்கப்பட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர், ஆதரவாளர்கள்
 இவர்களைத் தவிர பல பெற்றோர்களும் பாடசாலையைச் சுற்றியுள்ள பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மருத்துவ பரிசோதனை முகாமைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அன்று வருகை தந்திருந்த அனைத்து மாணவர்களும் பற் பரிசோதனை செய்யப்பட்டதாக டொக்டர் க.மகாலிங்கம் தெரிவித்தார். அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் பற்றி கூட வந்த பெற்றோருக்கு அல்லது பாதுகாலருக்குத் தெரிவிக்கப்பட்டது. யாரும் இல்லாதவிடத்து ஆசிரியர்கள் ஊடாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்ட்டதாகக் கூறினார்.


ஒரு சில பிள்ளைகள் மேலதிக பற்சிகிச்சை தேவைப்பட்டதால் அவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாகத் தெரிவித்தார்.

மருந்துகள் தோவைப்பட்டவர்களுக்கு அதை வாங்குவதற்கான மருந்துச் சிட்டைகள் கொடுக்கப்பட்டன.

வளர்ந்தவர்களை பரிசோதித்த டொக்டர்.எம்.கே.இரகுநாதன், அவர்களில் ஒரு சிலருக்கு இருதயத்தில் murmur கள் இருந்ததால் அவர்களை யாழ் போதான வைத்தியசாலை இருதய நோய் நிபுணர்களான டொக்டர் லக்ஷ்மன், டொக்டர் குருபரன் ஆகியோரிடம் மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பியதாகச் சொன்னார்.

பொதுவாக மருத்துவப் பரிசோதனை முகாமிற்கு வந்தவர்கள் அது பற்றி மிகுந்த திருப்தி தெரிவித்தார்கள். எமது பாடசாலையைப் பொறுத்த வரையில் இது மிக முக்கியமான நிகழ்வாகும். ஒரு முன்னோடி முயற்சியாகவும் கருதலாம்.

ஒரு சில குறைகளும் உணரப்பட்டன.
  • கண்பரிசோதனை செய்வதும் மாணவர்களைப் பொறுத்தவரை முக்கியமானது. அடுத்த முறை இதற்கான ஒழுங்குகள் செய்யப்படும்.
  • மருந்துகள் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு குறையாகும். 
  • மருத்தவ முகாமிற்கு வந்தவர்களது பெயர் விபரங்கள், கண்டறிய்பட்ட நோய்கள், கொடுக்பட்ட சிகிச்சை, மேலதிய சிகிச்சைக்கு அனுபப்பட்டிருந்தால் அவை பற்றிய குறிப்பு ஆகியவற்றை ஆவணப்படுத்துவற்கு ஒரு பதிவு ஏடு பேணப்படவில்லை.

'இது ஒரு ஆரம்ப முயற்சி. பரீட்சார்த்தமாகச் செய்துள்ளோம். ஏதிர்பார்த்ததை விட அதிகமாக வெள்ளியளித்தது. மேற்கண்ட குறைகளை அடுத்த வருடம் மாற்றயமைக்க முடியும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

வருடாவருடம் இத்தகைய முகாமை நடத்த இருப்பதாக தான் பாடசாலை அதிபருக்கு உறுதியளித்தாகவும் தெரிகிறது.


அதேபோல டொக்டர் க.மகாலிங்கம் அடுத்த வருட முகாமிற்கு பற்சிகிச்சைக்கான mobile Unit யை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் பெற உத்தேசித்திருப்பதாகக் கூறினார்.  இதனால் அவ்விடத்திலேயே சில சிகிச்சைகளைச் செய்வதற்கு முடியும் எனக் கூறினார்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த மருத்துமுகாமை ஒழுங்கு செய்த  எமது ஒன்றியத் தலைவர் டொக்டர்.எம்.கே.இரகுநாதன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து முகாமை நடாத்திய ஒன்றிய உறுப்பினர்  டொக்டர் க.மகாலிங்கம், டொக்டர் இரவீந்திரன், டொக்டர் ஜக்கோப்ஸன், டொக்டர்.தவநாதன் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

முகாம் ஒழுங்காக நடைபெற ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கிய அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினரது பணிகளும் போற்றுதற்குரியது.

இங்கு பகிரப்பட்ட புகைப்படங்களை கொடுத்துதவிய திரு.மு.சிவநேசன், திரு.பா.சயந்தன் ஆகியோருக்கு நன்றிகள்.

மருத்துவப் பரிசோதனை விழாவில் எடுக்கப்பட்ட ஏனைய புகைப்படங்கள் இன்னமும் கிட்டவில்லை. விரைவில் பகிரப்படும்.

0.0.0.0.0.0.0

Post Comment

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது